என் பெயர் எஸ்கோபர்-கிழக்கின் இன்னொரு குறைப்பிரசவம்

என் பெயர் எஸ்கோபர் - Pa.Raghavan

கொலம்பிய போதைப்பொருள் கடத்தல் மன்னனான பாப்லோ எஸ்கோபரின் வரலாறு மிகவும் சுவாரசியமானது.பல் திருப்பங்களும் திடுக்கிடல்களும் நிறைந்தது.பா.ராகவன் எஸ்கோபரின் வாழ்க்கையை சாதாரணமாக எழுதியிருந்தாலே இந்நூல் மிகவும் சுவாரசியமானதாக அமைந்திருக்கும்.ஆனால் பாடி.ராவோ கதையை மேலும் சுவாரசியமாக்குகிறேன் பார் என்று இறங்கி பல இடங்களில் தேவையில்லாமல் புலம்பி கடுப்பேற்றுகிறார்.போதாக்குறைக்கு ஆங்காங்கே இலக்கணப் பிழைகளும் பொருட்பிழைகளும் தலைகாட்டி நாங்களும் இருக்கிறோம் என்கின்றன.எஸ்கோபரைப் பற்றி நிறையைத் தகவல்களை உள்ளடக்கியிருந்தாலும் பாடி.ராவினதும் கிழக்கு பதிப்பத்தாரினதும் அலட்சியத்தால் குறைப்பிரசவமான குழந்தையாக எம் கைகளில் தவழ்கின்றது "என் பெயர் எஸ்கோபர்"