இன்னொரு பட்டாம்பூச்சி

இன்னொரு பட்டாம்பூச்சி - Ra. Ki. Rangarajan

பிரெஞ்சு கைதியான பிலிக்ஸ் மிலானி என்ற கைதி தனது சிறை அனுபவங்களைப் பற்றி எழுதிய Convict என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பே இந்நூல். இப்படி புத்தகத்தை வாசித்து முடித்த போது ஏதோ ஹொலிவூட் படத்தை பார்த்து முடித்தது போன்று உணர்ந்தேன். அந்தளவுக்கு திடீர் திருப்பங்களும் திடுக்கிடும் சம்பவங்களும் கொண்ட மிகச் சுவாரசியமான புதினம் இந்நூல்.ரா.கி.ரங்கராஜனின் மொழிபெயர்ப்பு கலக்கல்.இன்று நிறையப் படிக்க வேண்டி இருந்த போதும் இந்நூலை வாசித்து முடிக்காமல் பாடப்புத்தகத்தில் கைவைக்க மனம் ஒப்பவில்லை. உண்மைச் சம்பவங்களின் தொகுப்பே இந்நூல் என்று கூறப்பட்டுள்ள போதும் சில இடங்களில் மிகைப்படுத்தி எழுதியிருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதை தடுக்க முடியவில்லை.இருந்தும் இம் மிகைப்படுத்தல்கள் புதினத்தை மேலும் சுவாரசியமானதாக மாற்றியிருப்பதால் அவற்றைக் கண்டுகொள்ளத் தேவையில்லை. நேரமிருக்கும் போது வாசித்துப் பாருங்கள்.உங்கள் எண்ணமும் பெரும்பாலும் என் எண்ணத்தை ஒத்திருக்கும் என்று நம்புகிறேன்