சுஜாதாவின் புதிய பக்கங்கள்-திருத்தங்கள் தேவை

சுஜாதாவின் புதிய பக்கங்கள் - சுஜாதா

சுஜாதா எனக்கு பிடித்த கட்டுரையாளர்களில் ஒருவர்.பல்வேறுபட்ட விடயங்களை தொகுத்து எளிமையாகவும் சுவாரசியமாகவும் சொல்லும் ஆற்றலுடையவர்.அவர் கணையாழியின் இறுதிப்பக்கங்களில் எழுதிய கட்டுரைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நாற்பது கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் இந்நூலும் ஒரு வாசகன் என்ற அடிப்படையில் என் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கின்றது.வழக்கம் போல பல சுவாரசியமான விடயங்களை தொகுத்துக் கட்டுரைகளாக்கியிருக்கின்றார் சுஜாதா.இந்நூலில் சுஜாதா சிபாரிசு செய்திருக்கும் கவிதைகளில் பல மிக அருமையாக இருந்த போதும் அவரால் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் எவையும் என்னைக் கவரவில்லை.மரபுக்கவிதைகள் தொடர்பான தொடர் விளக்கங்களையும் எழுத்துப்பிழைகளையும் தவிர்த்திருந்தால் நூல் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.
3.5/5 கொடுக்கலாம்.