சுஜாதாவின் சின்ன சின்ன கட்டுரைகள்

சுஜாதாவின் சின்ன சின்ன கட்டுரைகள் - சுஜாதா என்னவோ தெரியவில்லை சுஜாதாவின் கட்டுரைகளில் எனக்கு ரொம்பப் பிரியம். சுஜாதா எளிய மொழி நடையில் நிறைய விஷயங்களை அலசுவதும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத விடயங்களை குழப்பமேற்படா வண்ணம் கட்டுரைகளில் இணைத்து கையாள்வதும் என்னை அதிகம் கவர்ந்தன.இந்நூலிலும் வாசகர்களை ஏமாற்றாத வகையில் பெரும்பாலான கட்டுரைகளை மிகவும் சுவாரசியமாக எழுதியிருக்கிறார் சுஜாதா.