ஜோதி

ஜோதி - சுஜாதா ஜோதி என்ற பெண்ணின் மரணம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட குறுநாவல் தான் ஜோதி.ஒருவனுடைய சமூக அந்தஸ்து அவனை எப்படி சட்டத்தின் பிடியிலிருந்து காக்கின்றது என்பதை இந் நாவலினூடாக சுட்டிக்காட்டியிருப்பார் சுஜாதா.நாவலின் இறுதிப்பகுதியில் சுஜாதாவும் என்டர் ஆகின்றார்.கதையின் முதல் பாதி சற்று விறுவிறுப்பாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி சப்பென்று ஆகிவிட்டது.கணேஷ்,வசந்த் மிஸ்ஸிங்.அதனால் வழமையான சுவாரசியமும் கொஞ்சம் மிஸ் ஆகின்றது.முடிவு யதார்த்தபூர்வமானது என்றாலும் திரில்லர் என்று ஆர்வத்துடன் வாசிக்கும் வாசகனுக்கு பெரும்பாலும் ஏமாற்றத்தையே அளித்திருக்கும் என்பது என் எண்ணம்.