24 ரூபாய் தீவு [24 rūpāy tīvu]

24 ரூபாய் தீவு [24 rūpāy tīvu] - சுஜாதா கொலை செய்யப்பட்ட பெண் ஒருத்தியின் டயறி ஒரு நிருபரிடம் கிடைக்கின்றது.அதனை சற்று நேரத்தில் தொலைத்துவிட்ட நிருபனுக்கும் அந்த டயறியைத் தேடி அலையும் கும்பலிற்குமிடயையேயான போராட்டத்தை சுவாரசியமாகச் சொல்லியிருப்பார் சுஜாதா.இடையிலேயே குற்றவாளி யார் என்று ஊகிக்க கூடியதாக இருப்பதனால் ஏற்படும் தொய்வை கணேஷ்-வசந்தின் வருகை தவிர்த்து விடுகின்றது.பிற்பகுதியில் கணேஷ்-வசந்த் கதையைப் புரட்டிப் போடுவார்கள் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் எஞ்சியது.பெரும்பாலான சுஜாதாவின் நாவல்களைப் போல இந்நாவலின் கிளைமாக்சும் எனக்குப் பிடித்திருந்தது.