அனிதா இளம மனைவி [Anita - Ilam Manaivi]

அனிதா இளம மனைவி [Anita - Ilam Manaivi] - சுஜாதா சுஜாதாவின் ஆரம்பகால த்ரில்லர்களில் ஒன்று.வேகமான கதை ஓட்டம்,திடீர்த் திருப்பங்கள் என் சுவாரசியமாக நகர்கிறது நாவல். கணேஷ் மட்டும் வருகிறார்.வசந்தைக் காணவில்லை.வசந்தின் வேலைகளில் ஒரு பாதியை கணேசும் மற்றைய பாதியை சுஜாதாவும் செய்தாலும் வசந்த் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது.அனிதாவும் மோனிகாவும் கணேஷ் கணேஷ் என்று உருகி வழிவது சலிப்பூட்டியது.கணேஷின் ஹீரோயிசத்தையும் கொஞ்சம் மட்டுப்படுத்தியிருக்கலாம்.ஆரம்பகால நாவல் கொஞ்சம் சென்டிமென்ட் தூக்கலாக இருக்கின்றது.சுவாரசியத்துக்காக ஒரு தடவை வாசிக்கலாம்.