ஒரு வாசகனின் எண்ணச்சிதறல்கள்

A Blog By Dineshsanth

Simma Soppanam - Fidel Castro

Simma Soppanam - Fidel Castro - Marudhan போரடிக்காத முறையில் எழுதப்பட்டிருந்தாலும் காஸ்ட்ரோவின் நெகட்டிவ்களை பற்றி மருதன் எழுத மறந்ததேனோ?பிடலுக்கு ஆகக்குறைந்து 4 காதலிகள் இருந்தனர்.அவர்களுள் பிரபலமான NATY REVELUTA,MARITA LORENZ பற்றி ஒரு வரி கூடக் குறிப்பிடாமல் பிடலிற்கு பல காதலிகள் என்பது அமெரிக்காவின் வெறும் வதந்தி என்று குறிப்பிட்டது நகைப்புக்குரியது.சில இடங்களில் பிடல் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட தகவல்களைக் காண முடிகின்றது.உ+ம் பிடல் வாசிக்காத புத்தக வகை எதுவும் இருக்க முடியாது. கியூப வரலாறு,உலக வரலாறு தொடர்பான "அத்தனை" நூல்களையும் பிடல் வாசித்தார்.பிடல் காஸ்ட்ரோவின் சீர்திருத்தங்களால் கியூபா முன்னேறியிருந்தது உண்மை எனினும் பொருளாதார சீர்திருத்தங்களால் மக்கள் சில பல இன்னல்களைச் சந்தித்தது பற்றி மருதன் ஏதும் குறிப்பிடாதது இது பிடலின் சுயசரிதையா? இல்லை பிடல் புராணமா?

Vibareedha Kotpadu

Vibareedha Kotpadu - சுஜாதா கணேஷ்-வசந்த் கலக்கும் சுஜாதாவின் மற்றுமொரு நாவல்.கொலையாளியை ஊகிப்பது அவ்வளவு பெரிய கடினமான விடயமாக இல்லை என்றாலும் கதையை கொண்டு சென்ற விதம் நன்றாக இருந்தது.குறிப்பாக கொலைக்கு பின்னர் கொலையாளியைத் கண்டுபிடிக்க கணேஷ்-வசந்த் செய்யும் முயற்சிகளும் கணேஷின் கேள்விகளும் அதற்கான வசந்தின் பதில்களும் ரசிக்க வைத்தன

இதன் பெயரும் கொலை [Ithan Peyarum Kolai]

இதன் பெயரும் கொலை [Ithan Peyarum Kolai] - சுஜாதா கணேஷ்-வசந்த் தோன்றினாலும் கதையில் கொஞ்சம் சுவாரசியம் குறைந்தது போல் ஒரு உணர்வு.கொலையாளி யார் என்று இறுதியில் தான் தெரிந்தாலும் கொலையாளியை ஊகிப்பது அவ்வளவு கடினமாக இல்லை.வசந்தின் காமெடிகளும் அவ்வளவு ரசிக்க வைக்கவில்லை என்றாலும் கதை தொய்வின்றி விறுவிறுப்பாக செல்கின்றது.நேரமிருந்தால் ஜாலியாக ஒருமுறை வாசிக்கலாம்

உலோகம்

உலோகம் - Jeyamohan ஈழப்போராளி ஒருவரின் உண்மைக் கதையை தழுவிய குறுநாவல் என்று குறிப்பிடப்பட்டாலும் அது ஏனோ மனதோடு ஒன்றவில்லை.இந் நூலின் முன்னுரையில் அகத்தோடு பேசுவது தான் இலக்கியம் என்று குறிப்பிட்டிருப்பார் ஜெமோ.ஆனால் இக்கதையில் எம்மோடு பேசும் அகம் ஜெமோவினுடையது என்பது குறித்த முன்னாள் போராளியின் வார்த்தைகளில் குறிப்பாக வரலாறு தொடர்பான அவனது கருத்துகளில் தெளிவாகவே புலப்படுகின்றது.எட்டுப் பத்து வரிகளிலேயே எம் ஆழ்மனத்துயரங்களையும் உணர்வுகளையும் கண்ணாடி போல் பிரதிபலிக்கும் ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகளையும் மனதோடு ஒட்டாமல் வெறும் கதையாக நகரும் உலோகத்தையும் நோக்கும் போது ஒன்று மட்டும் புரிகிறது எம்மவர் உணர்வுகளை பிரதிபலிக்க எம்மவர்களால் மட்டும் தான் முடியும்.

ஒரு நடுப்பகல் மரணம் [Oru Nadupagal Maranam]

ஒரு நடுப்பகல் மரணம் [Oru Nadupagal Maranam] - சுஜாதா A good thriller novel from writer Sujatha.I really like the way he told the story.At the beginning there were four or five suspects then police found a lot of evidences against Rakesh and ended with a sudden twist.Though there weren't much logical errors I don't think it could be done in this way in real.