
ஈழப்போராளி ஒருவரின் உண்மைக் கதையை தழுவிய குறுநாவல் என்று குறிப்பிடப்பட்டாலும் அது ஏனோ மனதோடு ஒன்றவில்லை.இந் நூலின் முன்னுரையில் அகத்தோடு பேசுவது தான் இலக்கியம் என்று குறிப்பிட்டிருப்பார் ஜெமோ.ஆனால் இக்கதையில் எம்மோடு பேசும் அகம் ஜெமோவினுடையது என்பது குறித்த முன்னாள் போராளியின் வார்த்தைகளில் குறிப்பாக வரலாறு தொடர்பான அவனது கருத்துகளில் தெளிவாகவே புலப்படுகின்றது.எட்டுப் பத்து வரிகளிலேயே எம் ஆழ்மனத்துயரங்களையும் உணர்வுகளையும் கண்ணாடி போல் பிரதிபலிக்கும் ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகளையும் மனதோடு ஒட்டாமல் வெறும் கதையாக நகரும் உலோகத்தையும் நோக்கும் போது ஒன்று மட்டும் புரிகிறது எம்மவர் உணர்வுகளை பிரதிபலிக்க எம்மவர்களால் மட்டும் தான் முடியும்.