
சித்ரா என்ற மையப்பாத்திரத்தைச் சுற்றி ஏனைய பாத்திரங்களை உருவாக்கிய விதமும் கதையை சினிமாத் தன்மையாக இல்லாமல் இயல்பாக கொண்டு சென்ற விதமும் என்னைக் கவர்ந்திருந்தன.வினோத் என்ற கதாபாத்திரம் செயல்களிலாகட்டும் பேசும் வார்த்தைகளிலாகட்டும் சரி விரக்தியின் விளிம்பில் நிற்கும் ஒரு பணக்கார இளைஞனை எம் கண் முன்னே நிறுத்துகின்றது.சுஜாதாவின் வசனங்கள் பல இடங்களில் ரசிக்க வைத்தன.இறுதியில் நித்தியாவிடம் முத்துசாமி பேசும் வார்த்தைகள் கிளாஸ்.என்னை மிகவும் கவர்ந்த நாவல்களில் இதுவும் ஒன்று